Pass Book தொலைந்துவிட்டால் புது Pass Book பெறுவது எப்படி?



இன்றைய காலத்தில் நாம் செய்த அனைத்து வேலைகளுக்கும் ஏதேனும் ஒரு எழுத்து பூர்வமான ஆவணத்தை ஆதாரமாக வைத்திருக்கிறோம். அதுபோல வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஆதாரமாக வங்கி வாடிக்கையாளர்களுக்கு Pass Book வழங்குகிறது. வங்கி கணக்கின் Pass Book  ஐ வாடிக்கையாளர்களே பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் ஏதேனும் சில கவனக்குறைவினால் வங்கி கணக்கின் Pass Book ஐ தொலைத்துவிட்டால் புது Pass Book எப்படி வங்கியிடம் விண்ணப்பித்து பெற வேண்டும் என்பதை கீழே விபரமாக வழிமுறைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளதை காண்போம்.

 

1.  முதலில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க் (Link) ஐ கிளிக் (Click) செய்து அதில் உள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளவேண்டும்.

 

 

2.  விண்ணப்பத்தில் விடுபட்டுள்ள இடங்களில் வாடிக்கையாளரின் பெயர், முகவரி வங்கி கணக்கின் விபரம் போன்றவற்றை சரியாக எழுத வேண்டும். விண்ணப்பத்தில் வாடிக்கையாளரின் கையெழுத்து (Sign) தெளிவாக இருக்க வேண்டும்.

 

3.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வங்கியில் உதவி மேலாளர் அல்லது மேலாளரிடம் (Assistant Manager or Manager) கொடுக்க வேண்டும்.

 

4.  புது Pass Book கோரி விண்ணப்பித்த பிறகு வாடிக்கையாளர்களுக்கு புது Pass Book வழங்கப்படும். 

 

மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி வங்கி கணக்கின் புது Pass Book ஐ விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். 

 

பின்வருபவை புது Pass Book விண்ணப்பித்து பெறுவது தொடர்பான கேள்விகளும் பதில்களும் ....

1. எந்த கிளையில் விண்ணப்பிக்க வேண்டும்?

வாடிக்கையாளர் கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளையில் மட்டுமே புது Pass Book கோரி விண்ணப்பிக்க வேண்டும்.

2.   வாடிக்கையாளர் வங்கிக்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டுமா?

கண்டிப்பாக வாடிக்கையாளர் நேரில் வங்கிக்கு சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும்.

3.   விண்ணப்பத்துடன் என்னென்ன ஆவணங்கள் இணைக்க வேண்டும்?

வாடிக்கையாளரின் ஆதார் அட்டை அல்லது பான் கார்டு மற்றும் சமீபத்தில் எடுக்கப்பட்ட 2 பாஸ்போர்ட் அளவுள்ள போட்டோ ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

4.   எத்தனை நாட்களில் புது Pass Book கிடைக்கும்?

           விண்ணப்பித்த அன்றே வங்கி வாடிக்கையாளருக்கு புது Pass Book வழங்கிவிடும். சில சமயங்களில் ஓரிரு தினங்கள் ஆகும்.

5.    புது Pass Book பெற வாடிக்கையாளர் கட்டணம் செலுத்த வேண்டுமா?

ஆம். புது Pass Book பெறுவதற்காக வாடிக்கையாளர் கணக்கிலிருந்து ரூ. 100/- முதல் ரூ. 200/-  பிடித்தம் செய்யப்படும்.

6.  ஒவ்வொரு முறையும் Pass Book ன் கடைசி பக்கமும் entry செய்த பிறகு புது Pass Book ஐ விண்ணப்பித்து தான் பெற வேண்டுமா?

Pass Book தொலைந்தால் மட்டுமே வாடிக்கையாளர் விண்ணப்பித்து வாங்க வேண்டும். Pass Book ன் கடைசி பக்கமும் entry செய்த பிறகு வங்கி தானாகவே வாடிக்கையாளருக்கு புது Pass Book வழங்கும், இதற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது.