வங்கி கணக்கில் வாடிக்கையாளரின் பெயரில் பிழையா? பிழையை எப்படி திருத்துவது?



ஒவ்வொருவருக்கும் அவரவர் பெயர் அவர்களது தனி அடையாளமாக கருதப்படுகிறது. அடையாள அட்டையில் உள்ள பெயரில் பிழையேதும் இருந்தால் அதன் மூலம் தேவையில்லாத பல சிக்கல்கள் எழும். எனவே பிழையை உடனே திருத்தி கொள்வது மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்த்து கொள்ளலாம். அது போலவே வங்கியிலும் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளரின் பெயரில் பிழை இருந்தால் அதை உடனே திருத்தம் செய்து கொள்ள வேண்டும். பெயரில் உள்ள பிழையை எவ்வாறு திருத்தி கொள்வது? அதற்கு எவ்வாறு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்பதை கீழ்கண்ட வழிமுறைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 

1.  கீழே தரப்பட்டிருக்கும் லிங்க் (Link) ஐ கிளிக் (Click) செய்து அதில் உள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளவேண்டும்.

 

 

2.  விண்ணப்பத்தில் வாடிக்கையாளரின் பெயரை பிழையின்றி சரியாக எழுத வேண்டும். வாடிக்கையாளரின் பெயரில் உள்ள பிழையை சுட்டிக்காட்டி சரியான பெயர், முகவரி வங்கி கணக்கின் விபரம் போன்றவற்றை சரியாக எழுத வேண்டும். விண்ணப்பத்தில் வாடிக்கையாளரின் கையெழுத்து (Sign) தெளிவாக இருக்க வேண்டும்.

 

3.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வங்கியில் உதவி மேலாளர் அல்லது மேலாளரிடம் (Assistant Manager or Manager) கொடுக்க வேண்டும்.

 

மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி வங்கியில் விண்ணப்பம் செய்து பெயரில் உள்ள பிழையை திருத்தி கொள்ளலாம்.

 

பின்வருபவை பிழை திருத்தம் செய்ய கோரி விண்ணப்பம் செய்வது தொடர்பான கேள்விகளும் பதில்களும் ....

 

1. எந்த கிளையில் விண்ணப்பிக்க வேண்டும்?

வாடிக்கையாளர் கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளையில் மட்டும் பிழை திருத்தம் கோரி விண்ணப்பிக்க வேண்டும்.

2. வாடிக்கையாளர் வங்கிக்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டுமா?

வாடிக்கையாளர் நேரில் வங்கிக்கு சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும்.

3. விண்ணப்பத்துடன் ஆவணங்கள் ஏதேனும் இணைக்க வேண்டுமா?

விண்ணப்பத்துடன் வாடிக்கையாளரின் ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கின் பாஸ் புக் ஆகியவற்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

குறிப்பு : ஆதார் அட்டையிலும் வாடிக்கையாளரின் பெயரில் பிழையுடன் இருந்தால் முதலில் ஆதார் அட்டையில் உள்ள பிழையை திருத்தும் செய்த பின்பு தான் வங்கியில் பிழை திருத்தம் செய்ய கோரி விண்ணப்பிக்க வேண்டும்.

4. எத்தனை நாட்களில் பெயரில் உள்ள பிழையை திருத்தம் செய்து தரப்படும்?

விண்ணப்பித்த நாளிலிருந்து 2 முதல் 3 நாட்களுக்குள் வாடிக்கையாளரின் வங்கி கணக்கின் பாஸ் புக் ல் பெயரில் உள்ள பிழையை நீக்கி திருத்தம் செய்து தரப்படும் அல்லது திருத்தப்பட்ட பெயரில் புது பாஸ் புக் வழங்கப்படும்.